182
சென்னையை அடுத்துள்ள பெருங்குடி கல்லுக்குட்டை பகுதியில் பாழடைந்த கிணற்றை தூர்வார முயன்றபோது விசவாயு தாக்கியதில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் பாழடைந்த நிலையில் காணப்பட்ட கிணற்றினை இவ்வாறு தூர்வார முயன்ற போதே இவ்வாறு மூவரும் உயிரிழந்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற மீட்புக்குழுவினர் உயிர்பாதுகாப்பு கவசம் அணிந்தவாறு கிணற்றுக்குள் இறங்கி மீட்புப்பணியில் ஈடுபட்டு மூவரது சடலங்களை மீட்டதுடன் ஏனைய மூவரை மருத்துமனையில் அனுமதித்துள்ளனர்.
#பாழடைந்த கிணற்றை #விசவாயு
Spread the love