இன்று நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் அதில் பங்கேற்பதற்காக, தமிழக அதிகாரிகள் டெல்லி சென்றுள்ளனர். உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், கடந்த ஆண்டு காவிரி மேலாண்மை ஆணையகம், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவை அமைத்த மத்திய அரசு தமிழகம், கர்நாடகம், கேரளம், புதுச்சேரி மாநிலங்கள் காவிரி நீரைப் பகிர்ந்து கொள்ள ஏற்பாடு செய்திருந்தது.இதுவரை காவிரி மேலாண்மை ஆணையகம் 2 முறை கூடியநிலையில் இந்தக் கூட்டங்களில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில், காவிரி மேலாண்மை ஆணையகத்தின் 3ஆவது கூட்டம் இன்று டெல்லியில் உள்ள மத்திய நீர்வள ஆணையக அலுவலகத்தில் நடைபெறவுள்ள நிலையிலி அதில் பங்கேற்பதற்காக தமிழக அதிகாரிகள் டெல்லி சென்றுள்ளனர்.
மேகேதாட்டூ அணை கட்டுவதை கர்நாடக அரசு நிறுத்த வேண்டும். வரும் ஜூன் மாதம் தமிழகத்துக்கு 9.10 டிஎம்சியும், ஜூலை மாதம் 30 டிஎம்சியும் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என தமிழக அரசின் தரப்பில் வலியுறுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
#காவிரி மேலாண்மை ஆணையகம் #கூட்டம் ,