கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவினால் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட இடமாற்றங்களை இரத்து செய்யும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அம் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் முத்துபண்டார தெரிவித்தார்.
ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இலங்கையில் நடைபெற்ற குண்டுத்தாக்குதலையடுத்து, மே மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் கிழக்கு மாகாண தமிழ் பாடசாலைகளில் கல்வி கற்பித்த முஸ்லிம் ஆசிரியர்களுக்கு மாகாண ஆளுநரினால் இடமாற்றம் வழங்கப்பட்டிருந்தது.
கிழக்கு மாகாண பாடசாலைகளில் கற்பிக்கும் 167 ஆசிரியர்களுக்கு இவ்வாறு இடமாற்றங்கள் வழங்கப்பட்டிருந்தன. எனினும், ஜனாதிபதியின் உத்தரவிற்கமைய குறித்த இடமாற்றங்கள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் முத்துபண்டார மேலும் தெரிவித்துள்ளார்.