பாகிஸ்தானில் இந்து மதத்தை சேர்ந்த கால்நடை மருத்துவர் ஒருவர் மீது தெய்வ நிந்தனை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இஸ்லாமிய மத வாசகங்கள் உள்ள காகிதத்தில் மருந்துகளை சுற்றி விற்றதாக அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டள்ளது
தென் கிழக்கு பகுதியின் சிந்து மாகாணத்தில் உள்ள மிர்பூர் காஸ் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதனையடுத்து அங்கு கலவரம் வெடித்துள்ளதுடன் இந்துகளின் கடைகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.
இது தவறுதலாக நடந்துள்ளது என குறித்த கால்நடை மருத்துவர் தெரிவித்துள்ள போதிலும் அவர்மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்படும்.
புhகிஸ்தானில் உள்ள தெய்வ நிந்தனை சட்டம் இஸ்லாமிய மதத்தை பழிப்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கி வருகின்ற நிலையில் இந்த சட்டம் சிறுபான்மையினருக்கு எதிராக தவறுதலாக பயன்படுத்தப்படுவதாக விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
சில மாதங்களுக்கு முன் தெய்வ நிந்தனை செய்த வழக்கொன்றில் கிறிஸ்தவ பெண்ணான ஆசியா பீபியை விடுதலை செய்து பாகிஸ்தான் உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்திருந்தது குறிப்பிடத்தக்கது
#pakistan #veterinary doctor #பாகிஸ்தானில் #இந்து மத #கால்நடை மருத்துவர் #தெய்வ நிந்தனை