Home பிரதான செய்திகள்உலகக்கிண்ண பயிற்சிப் போட்டி – மேற்கிந்தியதீவுகள் 91 ஓட்டங்களால் நியூசிலாந்தை வென்றுள்ளது

உலகக்கிண்ண பயிற்சிப் போட்டி – மேற்கிந்தியதீவுகள் 91 ஓட்டங்களால் நியூசிலாந்தை வென்றுள்ளது

by admin

உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான பயிற்சிப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 91 ஓட்டங்களால் நியூசிலாந்து அணியினை வென்றுள்ளது. இரு அணிகளுக்குமிடையில் நேற்றையதினம் பிரிஸ்டலில் நடைபெற்ற போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற நியூசிலாந்து முதலில் களத்தடுப்பினை தெரிவுசெய்தது.
இதனையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 49.2 ஓவரில் 421 ஓட்டங்களை எடுத்தநிலையில் சகல விக்கெட்டுக்களையும் இழந்திருந்தது.

மேற்கிந்திய தீவுகள் அணியின் சார்பில் ஷாய் ஹோப் 101 ஓட்டங்களும் ஜேசன் ஹோல்டர் 47 ஓட்டங்களும் , அந்த்ரே 54 ஓட்டங்களும் எடுத்திருந்தனர். இதனையடுத்து 422 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி நியூசிலாந்து அணி 47.2 ஓவரில் 330 ஓட்டங்களை மாத்திரமே பெற்று சகல விக்கெட்டுக்களையும் இழந்த மேற்கிந்தியதீவுகள் 91 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

நியூசிலாந்து அணியின் சார்பில் அணித்தலைவர் கேன் வில்லியம்சன் 85 ஓட்டங்களையும் டாம் பிளெண்டல் 106 ஓட்டங்களையும் எடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

#West Indies  #World Cup #New Zealand #மேற்கிந்திய தீவுகள்  #நியூசிலாந்து

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More