நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாகவும். பாதுகாப்பு காரணங்களுக்காகவும் நல்லூர் கந்தசுவாமி ஆலய கற்பூர திருவிழா மிக எளிமையாக நடைபெற்றது.
வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி கோவில் கற்பூர திருவிழா இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. காலை 1008 சங்குகள் வைத்து சங்காபிசேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மாலை வசந்தமண்டபத்தில் முருக பெருமானுக்கு திருக்கல்யாண நிகழ்வுகள் இடம்பெற்றன.
திருக்கல்யாணத்தை அடுத்து ஆறுமுக சாமி உள்வீதியுலா வந்து தொடர்ந்து ஆலய பிரதான கோபுர வாயில் ஊடாக வள்ளி , தெய்வானை சமேதரராய் ஆறுமுக சாமி வெளி வீதி வந்து தேரடியை வலம் வந்து பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்.
கடந்த காலங்களில் கற்பூர திருவிழாவின் போது திருமண கோலத்தில் ஆறுமுக பெருமான் வள்ளி, தெய்வானை சமேதராய் பூந்தண்டிகையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சி அளிப்பார். அவ்வேளை பலர் தமது நேர்த்தி கடன்களை , வேண்டுதல்களை நிறைவேற்ற வேண்டி கற்பூர சட்டி ஏந்தி ,முருகனை வழிபடுவார்கள்.
இம்முறை பாதுகாப்பு காரணங்களுக்காக அவை தவிர்க்க ப்பட்டு வெளிவீதியுலா நிறுத்தப்பட்டு தேரடி வீதியை ஆறுமுக பெருமான் வலம் வந்தார்.
படங்கள்: ஐ.சிவசாந்தன்