எதிர்கட்சியினர் நாட்டிற்கு எதையும் செய்யாமல் ஆட்சியை பிடிப்பதற்கு கனவு கண்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜேபால ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார். அவர்கள் அவ்வாறு ஆட்சியை பிடிப்பதற்கு கனவு கண்டு கொண்டிருக்கும் போது ஐக்கிய தேசிய கட்சி நாட்டின் அபிவிருத்திக்கான வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
காலி, அக்மீமன பகுதியில்இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பிறகு, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.எந்தவொரு முயற்சியையும் முன்னெடுக்காமல் எதிர்கட்சியினர் ஆட்சியை பிடிப்பதற்கு கனவு காண்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் டிசம்பர் மாதமளவில் 25 இலட்சத்திற்கு அதிகமான சுற்றிலாப் பயணிகள் இலங்கை வரலாம் எனவும் தற்போது இந்தியா, ஜேர்மன் உட்பட சில நாடுகள் இலங்கை பாதுகாப்பான நாடு என அறிவித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.