அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்புடனான 2-வது சந்திப்பு தோல்வி அடைந்ததால் ஆத்திரம் அடைந்த வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன், இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்த 5 அதிகாரிகளுக்கு மரண தண்டனை அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்த அமெரிக்காவுக்கான சிறப்பு தூதர் கிம் ஹியோக் சோல் மற்றும் வெளியுறவுத்துறையின் சிரேஸ்ட அதிகாரிகள் 4 பேரை சுட்டுக்கொன்று இவ்வாறு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக தென்கொரியப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
டிரம்ப் மற்றும் கிம் ஜாங் உன், கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிங்கப்பூரில் முதல்முறையாக சந்தித்து பேசியதனையடுத்து வடகொரியா ஏவுகணை சோதனைகளை நிறுத்திவிட்டு அமைதி பாதைக்கு திரும்பியது. எனினும் வியட்நாமில் இடம்பெற்ற 2-வது சந்திப்பு இணக்கமாக நடைபெறவில்லை. இதையடுத்து, இந்த சந்திப்புக்கு ஏற்பாடுகளை செய்த சிறப்பு தூதர் கிம் ஹியோக் சோல் மற்றும் வெளியுறவுத்துறை அதிகாரிகள் 4 பேர் மீது நாட்டின் தலைவருக்கு துரோகம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டது.
விசாரணைக்கு பிறகு கடந்த மார்ச் மாதம் அவர்கள் 5 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டதாகவும், அதனை தொடர்ந்து அங்குள்ள ஒரு விமான நிலையத்தில் வைத்து, 5 பேரும் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் தென்கொரியா பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#North Korea #Kim Jong-un #donald trump