உண்மையை வெளிக்கொணருதல் என்ற பெயரில் விக்கிலீக்ஸ் இணைய தளத்தின் ஸ்தாபகர் ஜூலியன் அசான்ஜே நீண்ட கால உளவியல் சித்திரவதைக்குட்படுத்தப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரியான ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் ஜூலியன் அசான்ஜேயின் மனித உரிமைகள் மீறப்படும் என்பதால், பிரித்தானியா அவரை நாடு கடத்த கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த 2010-ம் ஆண்டில் அமெரிக்க ராணுவம் தொடர்பான ரகசிய ஆவணங்களை விக்கிலீக்ஸ் இணையத்தில் வெளியிட்டதனையடுத்து, அமெரிக்க அரசால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள ஜூலியன் அசான்ஜே லண்டனில் உள்ள ஈக்வேடார் நாட்டின் தூதரகத்தில் தஞ்சம் அடைந்திருந்தார்.
இதனையடுத்து அவர்மீது சுவீடன் நாட்டுப் பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தியதனையடுத்து அவா அசான்ஜேவுக்கு எதிராக கைது உத்தரவு பிறப்பித்த லண்டன் காவல்துறையினர் கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்திருந்தனர். 2012ம் ஆண்டு லண்டனில் தஞ்சம் அடைந்த ஜூலியன் அசாஞ்சேவை 7 ஆண்டுகளுக்கு பின்னர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
#ஜூலியன் அசான்ஜே # உளவியல் #சித்திரவதை #விக்கிலீக்ஸ் #ஐக்கிய நாடுகள் சபை