கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்ட 13078 சமூர்த்தி பயனாளிகளுக்கு சமூர்த்தி நிவாரண உரித்துப் படிவம் வழங்கும் ஆரம்ப நிகழ்வு இன்று(02) கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது.
பிற்பகல் மூன்று முப்பது மணியளவில் ஆரம்மான நிகழ்வில் ஆரம்ப கைத்தொழில்,மற்றும் சமூக வலூட்டல் அமைச்சர் தயாகமகே, கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், கிளி நொச்சி படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் ரவிப்பிரிய கிளிநொச்சி சமூர்த்தி பணிப்பாளர் ஆரனி தவபாலன் மற்றும் பிரதேச செயலாளர்கள், பிரதேச சபைகளின் தவிசாளர்கள், பிரதேச சபைகளின் உறுப்பினர்கள் சமூர்த்தி உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட4500 பேருக்கு இச் சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்தும் ஏனையவர்களுக்கும் பிரதேச செயலகங்கள் ஊடாக வழங்கி வைக்கப்படும். எனவும்.சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களம் அறிவித்துள்ளது.
#கிளிநொச்சி #சமூர்த்தி #உரித்துப் படிவம் #ஆரம்ப நிகழ்வு