4ஆவது நாளாக தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும், பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்னதேரருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், கண்டி நகரிலுள்ள வர்த்தக நிலையங்கள் இன்று கடையடைப்பு மேற்கொள்ள தீர்மானித்துள்ளன. அந்தவகையில் கண்டி நகரிலுள்ள வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சர் ரிஷாட் பதியூதின், ஆளுநர்கள் அஸாத் சாலி, ஹிஸ்புல்லா ஆகியோரை பதவி நீக்குமாறு வலியுறுத்தி கடந்த 31ஆம் திகதி முதல் கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு முன்பாக அத்துரலிய ரத்னதேரர் உண்ணாவிரதத்தை ஆரம்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
#அத்துரலிய ரத்னதேரர் #கண்டி #கடையடைப்பு #ரிஷாட் பதியூதின் #அஸாத் சாலி #ஹிஸ்புல்லா