இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ பயணமொன்றை மேற்கொண்டு, அவுஸ்திரேலியா உள்நாட்டலுவல்கள் அமைச்சர் பீட்டர் டட்டன் இன்று இலங்கை வரவுள்ளார். இலங்கைக்கு வரும் அவர் உயிர்த்த ஞாயிறன்று தாக்குதலுக்கு இலக்கான கட்டுவாப்பிட்டிய செபஸ்தியர் தேவாலயத்துக்கு சென்று பார்வையிடவுள்ளதாகவும் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
அத்துடன் இலங்கையின் பாதுகாப்பு நிலைமைகள் மற்றும் சட்டவிரோத ஆட்கடத்தல் தொடர்பாக கொழும்பிலுள்ள உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றையும் அவர் முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
#Peter Dutton #அவுஸ்திரேலியா #அமைச்சர் #இலங்கை #eastersundaylk