கடந்த வெள்ளிக்கிழமை முதல் உண்ணாவிரத போராட்டத்திலீடுபட்ட பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார். மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா ஆகியோர் தமது பதவிவிலகியுள்ளதாக அவருக்கு அறிவிக்கப்பட்டதரைனத் தொடந்தே தேரர் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
உண்ணாவிரத போராட்டத்தை நிறைவுக்குக் கொண்டு வந்த அதுரலிய ரத்ன தேரர் வைத்திய பரிசோதனைக்காக கண்டி வைத்தியசாலைக்கு நோயாளர் காவு வண்டி மூலம் எடுத்துச்செல்லப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்க்பபட்டுள்ளது
#அத்துரலிய ரத்ன தேரர் #போராட்டம் #முடிவு #அசாத் சாலி #ஹிஸ்புல்லா