நாட்டுக்கானதொரு அதிர்ஷ்டான பூஜையினையே முன்னெடுத்திருப்பதாக கூறியுள்ள அத்துரலியே ரதன தேரர் 30 ஆண்டு காலம் நாட்டில் காணப்பட்ட யுத்தத்தின் போது மாவிலாறு போராட்டத்திலிருந்து வெற்றி பயணத்தை ஆரம்பித்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
எனவே நாட்டுக்கு கடமைப்பட்டவனாக தாம் இல்லை என்றும் தனது இந்த போராட்டத்திற்கு ஆதரவு வழங்க இங்கு வந்த அனைவருக்கும் நன்றி கூறுவதாகவும் கண்ணீருடன் தெரிவித்தமை அவரது ஆதரவாளர்களை நெகிழ்ச்சியடைய வைத்தது.
ஹிஸ்புல்லா மற்றும் அசாத் சாலியின் பதவிவிலகலையடுத்து உண்ணாவிரதத்தை கைவிட்ட அத்துரலியே ரதன தேரர், அமைச்சர் ரிஷாத் பதியுதீனை ஜனாதிபதியால் நீக்க முடியாது என்றும் இது தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தீர்மானமெடுப்பார் என்று எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.
உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்ட அத்துரலியே ரதன தேரரை உடனடியாக கண்டி வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.