கிளிநொச்சி மாவட்டத்தில் சமீப காலமாக சட்டவிரோத மணல் அகழ்வு அதிகரித்து வருகிறது என பொது மக்கள் கவலை தெரிவிததுள்ளனர். இரவு பகலாக கனரக வாகனங்கள் மற்றும் உழவு இயந்திரங்களில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று வருகிறது. பல இடங்களில் அரசியல் மற்றும் அதிகார தரப்பினர்களின் ஒத்துழைப்புடன் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுவதாகவும் பொது மக்கள் ஆதாரபபூர்வமாக தெரிவிக்கின்றனர்.
கடந்த ஒரு மாத்திற்க்குள் இவ்வாறு இடம்பெற்ற சட்டவிரோத மணல் அகழ்வின் போது காவல்துறையினரால் பிடிக்கப்பட்ட பெருமளவு மணல் கிளிநொச்சி நீதவான் நீதி மன்றத்திற்கு முன்பாக வீதியோரமாக காணப்படுகின்றமை மாவட்டத்தில் இடம்பெறுகின்ற சட்டவிரோத மணல் அகழ்வினை வெளிச்சம் போட்டு காட்டுகிறது எனவும், காவல்துறையினரிடம் பிடிபடாமலும் அதிகளவில் சட்டவிரோத மணல் அகழ்வுகள் இடம்பெற்று வருகிறது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
எனவே உரிய தரப்பினர்கள் சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பில் பொருத்தமான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் எனவும் தவறின் கிளிநொச்சி மாவட்டம் பாரியளவில் சுற்றுசூழல் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் எனவும் பொது மக்களால் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
#கிளிநொச்சி # சட்டவிரோத #மணல் அகழ்வு #சுற்றுசூழல்