தென்னாபிரிக்க அணியின் முன்னாள் தலைவர் ஏபிடிவிலியர்ஸ் மீண்டும் தென்னாபிரிக்க அணிக்காக விளையாடுவதற்கு முன்வந்த போதும் அணியின் முகாமையாளர்கள் அவரது வேண்டுகோளை நிராகரித்துவிட்டதாக கிரிக்கின்போ தகவல் வெளியிட்டுள்ளது
தென்னாபிரிக்கா உலககிண்ணப்போட்டிக்கான அணியை அறிவிப்பதற்கு 24 மணித்தியாலத்திற்கு முன்னதாக ஏபிடிவிலியர்ஸ் இந்த வேண்டுகோளை அணியின் தலைவர் டுபிளசிஸ், பயிற்றுவிப்பாளர் ஒட்டிஸ் கிப்சன்,தெரிவுக்குழுவின் தலைவர் லின்டாஜொன்டி ஆகியோரிடம் தெரிவித்துள்ளதாகவும் தனது ஓய்வு முடிவை மறுபரிசீலனை செய்ய விரும்புவதாக தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
எனினும் அணியின் முகாமையாளர்கள் இந்த வேண்டுகோளை நிராகரித்துள்ளனர் எனவும் அவரை மீண்டும் அணியில் சேர்த்துக்கொண்டால் ஓய்வை அறிவித்த பின்னர் கடந்த ஒரு வருட காலமாக விளையாடிவரும் அணிக்கு அநீதி இழைத்தது போலாகிவிடும் என அணியின் முகாமைத்துவம் கருதியது என கிரிக்கின்போ தெரிவித்துள்ளது.
ஏபிடிவிலியர்ஸ் இது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துள்ள போதிலும் தென்னாபிரிக்க அணிக்கு ஆதரவளிப்பது குறித்து முழுமையான கவனத்தை செலுத்திவருவதாக தெரிவித்துள்ளார்.
#ஏபிடிவிலியர்ஸ் #வேண்டுகோள் #முகாமையாளர்கள் #நிராகரிப்பு #தென்னாபிரிக்க #ab de villiers