157
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளுக்கு இடையிலான ஐந்தாவது கட்ட பேச்சுவார்த்தை ஆரம்பமாகியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டள்ளது. இரண்டு கட்சிகளும் இணைந்து கூட்டணி அமைப்பது சம்பந்தமாக இரு தரப்பினரும் கலந்துரையாடி வருகின்றனர்.
இரு கட்சிகளுக்கும் இடையே ஏற்கனவே நான்கு கட்ட பேச்சுவார்த்தை இடம்பெற்ற போதிலும் அவற்றில் முன்னேற்றகரமான விடயங்கள் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #ஶ்ரீலங்காசுதந்திரகட்சி #ஶ்ரீலங்காபொதுஜனபெரமுன #SLFP #SLPP
Spread the love