மன்னார் மாவட்டத்தில் உள்ள பிரபல பாடசாலையான மன் – புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் 150 வது ஆண்டு பூர்த்தி யூபிலியை முன்னிட்டு மன்னார் மாவட்டத்தை மையப்படுத்தி சமய சமூக கலாச்சார நிகழ்வுகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக குறித்த பாடசாலையின் அதிபர் அருட்சகோதரர் ரெஜினோல்ட் தெரிவித்துள்ளார்
வருகின்ற ஜீன் மாதம் 10 திகதி தொடங்கி அடுத்தவருடம் ஜீன் 10 ஆம் திகதிவரை யூபிலி ஆண்டாக பிரகடனப்படுத்தி ஒரு வருடம் பல்வேறு பட்ட கலை கலாச்சார பணிகளை முன்னெடுக்கவுள்ளதாக அதிபர் தெரிவித்துள்ளார்
குறிப்பாக விசேட இரத்ததான நிகழ்வு, பொது சிரமதான பணிகள் முதியோர் இல்ல தரிசிப்பு மாபெரும் நடைபவணி , ஆசிரியர் உபசரிப்பு நிகழ்வு மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு என பல்வேறு பட்ட நிகழ்வுகள் ஒழுங்கமைக்கப்பட்டு ஆரம்பிக்கப்படவுள்ளது
அதே நேரத்தில் இறுதி நாள் நிகழ்வில் விசேட கலை நிகழ்வுகள் உட்பட பரிசளிப்பு நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவே குறித்த நிகழ்வுகளுக்கு பாடசாலை பழைய மாணவர்கள் ,ஆசிரியர்கள் ,மாணவர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் என அனைவரும் கலந்து கொண்டு 150 வருட நிறைவு நிகழ்வை சிறப்பிப்பதுடன் ஒத்துழைப்பும் வழங்குமாறும் அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது.
#யூபிலி விழா #புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை#மாணவர்கள்