சிரியாவில் அரசு படை வீரர்களுக்கும், ஹயாத்தாஹிர் அல்ஷாம் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 21 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்ட நிலையில், அல்-கைய்தா அமைப்பின் ஆதரவுபெற்ற ஹயாத்தாஹிர் அல்ஷாம் பயங்கரவாதிகள் அரசு படைகளுக்கு சவாலாக உள்ளனர்.
இத்லிப் மாகாணத்தில் கடும் ஆதிக்கம் செலுத்தி வரும் அவர்கள், அயல் மாகாணங்களிலும் கால் பதிக்க முயற்சித்து வருகின்ற நிலையில் ரஸ்யா மற்றும் ஈரான் படைகளின் உதவியோடு சிரிய ராணுவம் அவர்களுடன் போரிட்டு வருகின்றது.
இந்த நிலையில் இத்லிப் மாகாணத்தின் அருகே உள்ள ஹமா மாகாணத்தின் அரசு படை வீரர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே இடம்பெற்ற கடும் மோதலில் ராணுவ வீரர்கள் 21 பேர் உயிரிழுந்துள்ளதுடன் 14 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #சிரியா #ஹயாத்தாஹிர்அல்ஷாம் #பயங்கரவாதிகள் #அல்கைய்தா #ரஸ்யா #ஈரான் #Syria #attacks