எட்டு வழி விரைவுச் சாலை திட்டத்திற்கு மத்திய மாநில அரசுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு விவசாயிகளிடம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.
மேற்கு மாவட்டங்களான சேலம் , ஈரோடு ,திருப்பூர் ,நாமக்கல் மற்றும் கோவை தொழில் வளம் நிறைந்த பகுதி என்றும், அருகாமையிலுள்ள கேரள மாநிலத்திலிருந்து வரும் கனரக வாகனங்கள் தடையில்லாமல் செல்லவும் சாலைகள் மேம்பாடு இருத்தல் வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். சேலத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், தமிழகத்தின் தேசிய நெடுஞ்சாலைகள் அனைத்தும் இருபது ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டவை என்பதனால் தற்போது வாகன என்ணிக்கை 300 சதவீதம் அதிகரித்துள்ள நிலையில் சாலைகளின் தேவைகள் அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இப்பகுதிகள் வளர்ந்துவரும் நிலையிலும் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதிகளாகவும் உள்ளதால் ,போக்குவரத்து மேம்பாட்டுக்கு முன்னோடியாக இவ்வகை சாலைகள் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டதாகவும், தற்போது சில பிரச்சனைகள் காரணமாக நடவடிக்கை குறித்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதாகவும் தமிழக முதல்வர் குறிப்பிட்டுள்ளார்
#எட்டு வழி விரைவுச் சாலை #ஒத்துழைப்பு #கோரிக்கை #எடப்பாடி பழனிசாமி