ரஸ்ய ஏவுகணை குறித்து முடிவு எடுக்க துருக்கிக்கு அமெரிக்கா கெடு விதித்துள்ளது. அமெரிக்க ராணுவ அமைச்சர் பட்ரிக் ஷனகன், துருக்கியின் ராணுவ அமைச்சர் ஹூலுசி அகாருக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே இவ்வாறு கெடு விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் அதிநவீன எப்-35 போர் விமானங்களையும், ரஸ்யாவின் எஸ்-400 விமான எதிர்ப்பு ஏவுகணை அமைப்புகளையும் துருக்கி ஒரு சேரப்பெற முடியாது எனவும் இரண்டில் எது வேண்டும் என்பதனை துருக்கி ஜூலை மாதத்துக்குள் முடிவு செய்ய வேண்டும் எனவும் குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது
ரஸ்யாவின் எஸ்-400 விமான எதிர்ப்பு ஏவுகணை அமைப்பு, நேட்டோ பாதுகாப்பு அமைப்பு முறைகளுக்கு எதிரானது எனவும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது எனவும் அமெரிக்கா தெரிவித்து வருவதுடன் . அதற்குப் பதிலாக தனது நாட்டின் பேட்ரியாட் போர் விமான ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு முறையை வாங்குமாறு துருக்கியை அமெரிக்கா வலியுறுத்தி வருகின்றது
அமெரிக்காவின் 100 அதிநவீன எப்-35 போர் விமானங்களை வாங்குவதற்கு துருக்கி பெரும் முதலீட்டுடன் ஏற்கனவே ஒப்பந்தம் செய்து கொண்டுள்ள நிலையில் ரஸ்யாவின் எஸ்-400 விமான எதிர்ப்பு ஏவுகணை அமைப்புகளை கையாள்வது தொடர்பாக பயிற்சி பெற துருக்கி தனது வீரர்களை ரஸ்யாவும் அனுப்பி உள்ளது. இந்த நிலையிலேயே அமெரிக்கா இவ்வாறு கெடு விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
#ரஸ்ய ஏவுகணை #முடிவு #துருக்கி #அமெரிக்கா #கெடு விதிப்பு