முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்பட 7 தமிழர்களை விடுவிப்பது தொடர்பான முடிவு எடுப்பது குறித்து பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
7 பேரையும் விடுதலை செய்வதற்கு ஆளுனரிடம் தமிழக அரசு இணக்கம் தெரிவித்திருந்த நிலையில், சஞ்சய் தத் விடுதலை விவகாரம் காரணமாக மத்திய அரசுக்கு தமிழக அரசியல் கட்சிகள் நெருக்கடி கொடுத்து வந்ததுடன் தேர்தல் முடிந்துவிட்ட நிலையில் ஆளுநர் விரைவில் முடிவு எடுப்பார் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டிருந்தது.
இந்தநிலையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று காலை திடீரென டெல்லிக்கு புறப்பட்டு சென்றுள்ள நிலையில் 7 தமிழர்கள் விடுதலை விவகாரத்தில் விரைந்து முடிவு எடுக்கப்போவதாக நம்பப்படுகின்றது.
இது தொடர்பாக பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசப்போவதாக கூறப்படுகிறது எனவே ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 தமிழகர்கள் விரைவில்விடுதலை செய்யப்படுவார்களா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. #ராஜீவ்காந்தி #7தமிழர்கள் #தமிழகஆளுநர் #பன்வாரிலால்புரோகித் #பிரதமர்மோடி