167
பல்கலைக் கழக மாணவர்கள் தங்களுக்கான வளங்களை கருத்தில் கொள்ளாது வளர்ச்சியை நோக்கிச் செல்வதே முக்கியம் . அப்போது தான் நாம் என்ன செய்கின்றோம் என்பதன் வளர்ச்சியை உயர்ச்சியை காட்டும் என்றார் யாழ் பல்கலைக் கழக தகுதி வாய்ந்த அதிகாரி துணைவேந்தர் பேராசிரியர் கந்தசாமி.
யாழ்பல்கலைக் கழக ஊடகக் கற்கைகள் துறையின் பெயர்ப்பலகை திறப்பு நிகழ்வும் அங்குரார்ப்பணமும் இன்று [10.06.2019 ] காலை 9.00 மணிக்கு கலாநிதி எஸ் .ரகுராம் தலைமையில் இட ம் பெற்றது . இந்நிகழ்வில் பிர தம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார் . அவர் மேலும் தெரிவிக்கையில்.
ஆரம்பத்தில் ஊடகக் கற்கை பயிற்சி வளங்களாக ஆரம்பிக்கப் பட்டு 17 வருட முயற்சியின் பயனாக தற்பொ ழுது ஒரு துறையாக ஊடகத் துறை உயர்ந்துள்ளது. இந்த வளர்ச்சி தொடர்ந்தும் முன்னேற வேண்டும் என்னுடைய 45 வருட கால பல்கலைக் கழக அனுபவத்தில் விஞ்ஞ ன பீடத்தில் செல்வநாயகம் கட்டடத் தை தான் பெரிதாக பார்க்கிறேன் . அதன் பின் இங்கு வேறு கட்டடங்கள் கட் டப்படவில்லை . ஊடக துறை இப்போது உருவாக்கப்பட்டுள்ள இடத்தில் தான் பொட் னி வகுப்பு நடந்தது .
இங்கு கவனிக்க வேண்டியது என்ன என்றால் இந்த கட்டடம் தற்காலிக்க கட்டடம். எப்பவோ உடைக்கப் பட வேண்டியது. எல்லா துறையும் சின்ன நிலையில் இருந்து தான் வளர்ந்தது. கட்டடம் பிரதானம் அல்ல என்ன செய்கின்றோம் என்பது தான் முக்கியம் . கட்டடம் வேண்டும் . ஆனால் பெரிதில்லை எமது செயல் தான் உயர்ச்சியை வளர்ச்சியை காட்டும் . ஆயினும் கட்டமைப்பு வசதிகளை நாம் செய்ய வேண்டும். இன்றைய உலகில் ஊடகக் கற்கை நெறி நவீன மயமாக்கப் பட்ட துறை . இன்று இலத்திரனியல் ஊடகங்கள் ஒரு தகவலை வெவ்வேறு நிலையில் உலகம் முழுதும் பரப்பும் அளவில் வந்துவிட்டான.
நல்ல சமூகத்தை ஊடகங்களால் உருவாக்கவும் முடியும் .நல்ல சமூகங்களை கீழ் நிலைக்கு கொண்டு செல்லவும் ஊடகங்களால் முடியும் . தொழில் நுட்ப ரீதியாக செய்திகள் உடனடியாக பகிரப்படும் நிலைக்கு வந்துவிடடான. நவீன உலகில் வந்துவிட்டொம் . எனவே மாணவர்களை நவீன உலகிற்கு முகம் கொடுக்க கூடியவர்களாக சமூகத்தை திருத்தக்க கூடியவர்களாக உருவாக்குவது இத்துறையின் கடமை . ஊடகக் கற்கைகள் பல்கலைக் கழகத்தின் ஊடாக எமது சமூகத்துக்கு கிடைத்த வரப்பிரசாதம் . என்றார் .
மேலும் , சிறப்பு அதிதியாக கலைப்பீடாதிபதி கே.சுதாகரும் மற்றும் முன்னாள் துணைவேந்தர் பாலசுந்தரம்பிள்ளை ஆகியோருடன் ஊடகக் கற்கைகள் துறையின் ஆரம்ப செயற்பாட்டா ளர்கள் உட்பட பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மாணவர்கள், பழைய மாணவர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
#மாணவர்கள் #வளங்களை #வளர்ச்சியை #யாழ்பல்கலைக் கழக ஊடகக் கற்கைகள் துறை #பெயர்ப்பலகை
யாழ்.தர்மினி பத்மநாதன்
Spread the love