மாலியில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் 95 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது புலானி என்ற விவசாய சமூகத்தினருக்கும், தோகோன் பழங்குடியினருக்கும் இடையே அடிக்கடி மோதல் நடைபெறுவது வழக்கம் என்கின்ற நிலையில் கடந்த ஆண்டு இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 500 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், மாலியின் மோப்தி பிராந்தியத்துக்கு உட்பட்ட கிராமம் ஒன்றில் துப்பாக்கிகளுடன் புகுந்த சிலர் கண்ணில்பட்ட அனைவர் மீதும் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டதில் சரமாரியாக 95 பேர் கொல்லப்பட்டள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலறிந்த அங்கு சென்ற அதிகாரிகள் இறந்தவர்களின் உடல்களை மீட்டதுடன் மேலும் காணாமல் போன பலரை தேடி வருகின்றனர்.
#மாலி #மோதலில் #பலி