வட கொரியாவில் பொது இடத்தில் தூக்கிலிடுவதற்காக பயன்படுத்தப்பட்ட 318 இடங்களை தாங்கள் கண்டுபிடித்துள்ளதாக தென் கொரியாவில் உள்ள ஓர் அரசசார்பற்ற அமைப்பு தெரிவித்துள்ளது
இடைநிலை நீதி பணிக்குழு எனும் இந்த அரசசார்பற்ற அமைப்பு வட கொரியாவைவிட்டு வெளியேறிய 610 பேரை சந்தித்து, உரையாடி வெளியிட்டுள ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்ட்டுள்ளது
மாட்டை திருடியவர்கள் முதல் தென் கொரிய தொலைக்காட்சியை பார்த்ததவர்கள் என பல்வேறு காரணங்களுக்காக கடந்த பல தசாப்தங்களாக கொல்லப்பட்டவர்கள் குறித்து தகவல்களை இந்த அமைப்பு சேகரித்துள்ளது. அத்துடன் வட கொரியாவைவிட்டு வெளியேறிய 610 பேரை சந்தித்து, உரையாடி இந்த அறிக்கையை தயார் செய்துள்ளது.
ஆறுகள், வயல்வெளிகள், சந்தை பகுதிகள், பாடசாலைகள், விளையாட்டு மைதானங்கள் என பல்வேறு பொது இடங்கள் அருகில் மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டதாகவும் பொது இடங்களில் நிறைவேற்றப்பட்ட இந்த மரண தண்டனையை பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கானோர் திரள்வார்கள் எனவும் கடந்த செவ்வாய்க்கிழமை அந்த அமைப்பினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் மரண தண்டனைக்கு உள்ளானவர்களின் குடும்ப உறுப்பினர்கள் குறிப்பாக குழந்தைகள் உட்பட இந்த மரண தண்டனையை பார்க்க நிர்பந்திக்கப்பட்டதாகவும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மரண தண்டனை விதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடல்கள் அரிதாகதான் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகின்றது எனவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இவ்வாறு மரண தண்டனைகள் விதிக்கப்படுகிறதா அதன் உண்மைதன்மை குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. #வடகொரியா #தென்கொரியா #மரண தண்டனை