150
விசா இன்றி இலங்கையில் தங்கியிருந்த இந்தியப் பிரஜை ஒருவர் சீதுவை, முலகலன்கமுவ பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சீதுவை காவல் நிலையத்திற்கு கிடைத்த தகவலுக்கமைய நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில், 28 வயதுடைய இந்தியப் பிரஜை ஒருவரே கைது செய்யப்பட்டதாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது. சந்தேகநபர் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலை செய்யப்பட உள்ளதுடன், சீதுவை காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். #இந்தியப்பிரஜை #சீதுவை #நீர்கொழும்புநீதவான்நீதிமன்றம்
Spread the love