உலகம் பிரதான செய்திகள்

ஹொங்கொங் போராட்டத்தில் வன்முறை 72 பேர் காயம் – அரச அலுவலங்கள் மூடப்பட்டுள்ளன.

Police officers fire a tear gas during a demonstration against a proposed extradition bill in Hong Kong, on June 12, 2019.

நேற்றைய தினம் ஹொங்கொங்கில் காவல்துறை மற்றும் போராட்டக்காரர்கள் இடையே மோதல் வெடித்திருந்திருந்த நிலையில் அங்கு மோசமான வன்முறை சம்பவங்களும் இடம்பெற்றிருந்ததனையடுத்து அடுத்து அங்கிருக்கும் சில அரச அலுவலங்கள் மூடப்பட்டுள்ளன. இன்று வியாழக்கிழமை காலை முதலே, மிகப்பெரிய அளவிலான கூட்டம் அரச அலுவலகங்களை சூழந்துள்ளதனையடுத்து இவ்வாறு அவை மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

ஹொங்காங்கில் குற்றவாளிகள் என சந்தேகிக்கும் நபர்களை தாய்வான், சீனாவிடம் ஒப்படைக்கும் சட்ட திருத்தத்த்துக்கு எதிராக குறித்த போராட்டம் இடம்பெற்று வருகின்றது. கொலை, பாலியல் வல்லுறவு உள்ளிட்ட குற்றங்களில் ஈடுப்பட்டவர்கள் என்று சந்தேகிக்கும் நபர்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என சீனா, தாய்வான் நாடுகள் கோரினால் அவர்களிடம் அந்த நபர்களை ஒப்படைக்க இந்த சட்ட திருத்தம் அனுமதிக்கிறது. எனினும் இந்த சட்டம் அரசியல் ரீதியான எதிரிகள்  தண்டிக்கப்படுவதற்கு வழிவகுக்கும் என கருதும் மக்கள் பாரிய போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றார்கள்.

அந்தவகையில் நேற்றைய தினம் குறித்த சட்ட திருத்தத்துக்கு எதிராக சட்டமன்ற் வளாகத்துக்கு அருகேயுள்ள முக்கிய வீதிகளில் பல்லாயிரக்கணக்கானோhர் கூடியதை தொடர்ந்து, போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் ரப்பர் குண்டுகளையும், கண்ணீர் புகை குண்டுப் பியோகங்களையும் மேற்கொண்டதனையடுத்து ஏற்பட்ட வன்முறை சம்பவத்தில், 15 முதல் 66 வயதுக்குட்பட்ட 72 பேர் காயமடைந்துள்ளதுள்ளனர் என்பதுடன் அதில் இருவர் அபாய கட்டத்தில் இருக்கின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஹொங்காங்கில் ஜனநாயகம் கோரி 2014ம் ஆண்டு நடந்தப்பட்ட குடை போராட்டத்திற்கு பினனர்; தற்போது நடக்கும் போராட்டம்தான் மிகவும் பெரியது என்பது குறிப்பிடத்தக்கது

#hong kong #protest #ஹொங்கொங்  #போராட்டத்தில் #வன்முறை  #அரச அலுவலங்கள்

Riot police gather face off with demonstrators near the Legislative Council in Hong Kong, Wednesday, June 12, 2019. Hong Kong police fired tear gas and high-pressure water hoses against protesters who had massed outside government headquarters Wednesday in opposition to a proposed extradition bill that has become a lightning rod for concerns over greater Chinese control and erosion of civil liberties in the semiautonomous territory. (AP Photo/Kin Cheung)

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.