Home உலகம் நியூசிலாந்தில் 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

நியூசிலாந்தில் 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

by admin

நியூசிலாந்தில் இன்று காலை 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதனையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்னர் மீறப் பெறப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது மக்கள் அதிகம் வசிக்காத கெர்மடெக் தீவு பகுதிகளிலிருந்து வடக்கே ஏற்பட்டுள்ளது.

கடலோர பகுதிகளில் கடும் பாதிப்பு ஏற்படுத்தும் அளவில் சுனாமி அலைகள் இருக்கும் எனவும் இதனால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் முதலில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த போதும் பின்னர் அந்த எச்சரிக்கை மீறப்பெறப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

  #நியூசிலாந்தில்  #நிலநடுக்கம் #சுனாமி

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More