அமெரிக்காவில் பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டம் தீட்டியது தொடர்பாக கைது செய்யப்பட்ட நபர் ஒருவருக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் நியூயோர்க் நகரில் வசித்து வந்த முகமது ரபீக் நாஜி என்பவருக்கே இவ்வாறு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் தீவிர ஆதரவாளரான அவர் ஏமன் நாட்டுக்கு சென்று ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேரவும் முயற்சி செய்துள்ளார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அத்துடன் பின்னர் அமெரிக்கா திரும்பிய அவர், ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தினரின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஆதரவாக செயல்பட்டதுடன் அதற்கான பொருட்களை வினியோகம் செய்வதில் ஆர்வம் காட்டி வந்துள்ளார் எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இவரைக் கைது செய்த காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளில் நியூயோர்க் நகரின் டைம் சதுக்கத்தில் மிகப்பெரிய தாக்குதல் நடத்தி பலரைக் கொல்ல திட்டம் போட்டமை தெரிய வந்துள்ள நிலையில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதனையடுத்து இவ்வாறு நேற்றையதினம் 20 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
#அமெரிக்கா #பயங்கரவாத #சிறை