கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் கீழ் இவ்வாண்டு மேற்கொள்ளப்பட்டுள்ள சிறுபோக செய்கைக்கான உரிய நீர் விநியோகம் இன்றி பெருமளவான நெற்பயிர்கள் அழிவடையும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசனக்குளமான இரணைமடுக்குளத்தின் கீழ் இவ்வாண்டு 16100 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோகச்செய்கை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டு அதற்கான பயிரச்செய்கைக்கூட்டம் கடந்த மார்ச்மாதம் 12ம்திகதி மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்று சிறு போக செய்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சிறு போக கூட்டத்தீர்மானத்திற் மாறாக அத்துமீறிய விதைப்புக்களும் மேலதிக விதைப்புக்களும் அதிகளவில் மேற்கொள்ளப்பட்டிருப்பதனால் உரிய முறையில் பயிர்ச்செய்கை மேற்கொண்ட அதிகளவான விவசாயிகள் பாதிக்கப்படும் அபாய நிலை காணப்படுகின்றது.
அதாவது குளத்தின் நீர் மட்டம் மிக வேகமாக குறைவடைந்து வரும் நிலையில் பயிர்ச் செய்கைக்கான நீர் விநியோகத்தினை சம்பந்தப்பட்ட கமக்கார அமைப்புக்கள், சீரான நீர் முகாமைத்துவத்தை பின்பற்றாத நிலையில் விவசாயிகளுக்கான நீர் விநியோகம் இன்றி பெருமளவான நெற்பயிர்கள் அழிவடையும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக கவலை வெளியிடப்பட்டள்ளது. #கிளிநொச்சி #இரணைமடுக்குளம் #சிறுபோகசெய்கை