14 ஆண்டுகளாக நடைபெற்று வந்த அயோத்தி பயங்கரவாத தாக்குதல் வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து பிரயாக்ராஜ் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் ஒருவர் விடுவிக்கப்பட்டுள்ளார்
அயோத்தி பயங்கரவாத தாக்குதல் – தீர்ப்பு இன்று
Jun 18, 2019 @ 03:43
அயோத்தியில் 2005ம் ஆண்டு நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் தொடர்பான வழக்கை விசாரித்து வரும் சிறப்பு நீதிமன்றம், இன்று தீர்ப்பினை வழங்க உள்ளது. அயோத்தியில் கடந்த 2005ம் ஆண்டு 5-ம் திகதி பலத்த பாதுகாப்பு நிறைந்த ராம ஜென்ம பூமி, பாபர் மசூதி வளாகத்திற்குள் தீவிரவாதிகள் நுழைந்து திடீர் தாக்குதல் நடத்தினர்.
மேலும் பாதுகாப்பு வேலியை தாண்டி உள்ளே வந்த அவர்கள் துப்பாக்கியால் சுட்டபடி முன்னேற முற்பட்டநிலையில் பாதுகாப்பு படையினர் அவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டதனையடுத்து ஏற்பட்ட மோதலில் தீவிரவாதிகள் 5 பேரும் கொல்லப்பட்டதுடன் பொதுமக்கள் இருவரும் உயிரிழந்திருந்தனர்.
இதனையடுத்து நடைபெற்ற விசாரணையில் அவர்கள் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்ததனையடுத்து இந்த தாக்குதல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 5 பேரை கைது செய்து அவர்கள் மீது சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
மேலும் இந்த வழக்கில் அரசுத்தரப்பில் 63 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டு அவர்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன.
14 ஆண்டுகள் நீடித்த இந்த வழக்கில் வாதப் பிரதிவாதங்கள் நிறைவடைந்துவிட்டதையடுத்து இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது
#அயோத்தி #பயங்கரவாத தாக்குதல் #தீர்ப்பு