புகையிரத திணைக்களத்தின் பல்வேறு தரத்திலான தொழிற்சங்க ஊழியர்கள் இன்று (19.06.19) நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பிப்பதற்கு உத்தேசித்துள்ளனர். புகையிரத சேவை தரங்களில் காணப்படும் வேறுபாடுகளைக் களைவது தொடர்பில் அனுமதி பெறப்பட்ட அமைச்சரவைப் பத்திரம் இதுவரை அமுல்படுத்தப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.
புகையிரத சாரதிகள், காவலர்கள், கட்டுப்பாட்டாளர்கள், நிலைய பொறுப்பதிகாரிகள் மற்றும் ரயில் கண்காணிப்பு முகாமையாளர்கள் இந்த பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக புகையிரத கண்காணிப்பு முகாமையளர்களின் தொழிற்சங்கத்தின் ஏற்பாட்டாளரும் ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தின் தலைவருமான லால் ஆரியரத்ன தெரிவித்துள்ளார். இதேவேளை பிரச்சினையை எதிர்நோக்கியுள்ள தொழிற்சங்கத்தினருடன் இன்று காலை பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும், இதன்பின்னர் நாளை புகையிரத தொழிற்சங்கத்தினர் மற்றும் போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகள், நிதி அமைச்சரை சந்தித்து கலந்துரையாட உத்தேசித்துள்ளதாகவும் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அசோக் அபேசிங்க குறிப்பிட்டுள்ளார். #பணிப்பகிஷ்கரிப்பு #புகையிரததிணைக்களம் #ரயில்சாரதிகள்