ஸ்மார்ட்போன் டேட்டா பயன்பாடு அதிகமாகக் கொண்ட நாடுகளுக்கான பட்டியலில் இந்தியா முன்னிலையில் இருப்பதாக சர்வதேச ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த தொலைத்தொடர்பு சாதனங்கள் தயாரிப்பு நிறுவனமான எரிக்ஸன், சர்வதேச நாடுகளில் ஸ்மார்ட்போன்களில் டேட்டா பயன்பாடு குறித்து மேற்கொண்ட ஆய்வின் முடிவிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது
2018ஆம் ஆண்டில் இந்தியாவில் சராசரியாக மாதம் ஒன்றுக்கு ஸ்மார்ட்போன் ஒன்றின் டேட்டா பயன்பாடு 9.8 ஜிபியாக இருந்துள்ளது. இதன் மூலம் சர்வதேச அளவில் மொபைல் டேட்டா பயன்பாடு அதிகமாகக் கொண்ட நாடுகளுக்கான பட்டியலில் இந்தியா முன்னிலையில் இருப்பது தெரியவந்துள்ளது.
இந்தியாவில் குறைந்த விலையில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் கொண்ட ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்படுவதாலும், மொபைல் டேட்டா கட்டணங்கள் குறைவாக இருப்பதாலும்தான் இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக எரிக்ஸன் நிறுவனம் தனது ஆய்வில் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் விற்பனையாகும் ஸ்மார்ட்போன்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், 2024ஆம் ஆண்டுக்குள் ஸ்மார்ட்போன் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை 110 கோடியாக உயரும் எனவும் இந்த ஆய்வில் மதிப்பிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
#ஸ்மார்ட்போன் #டேட்டா பயன்பாடு #இந்தியா #முன்னிலை