விமானத்தில் பயணிப்பதற்கு எதிரான இயக்கம் சுவீடன் நாட்டில் வளர்ந்து வருகின்ற நிலையில் ‘பறப்பது அவமானம்’ என்ற கோஷத்துடன் அந்த இயக்கம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. விமானங்கள் வெளிப்படுத்தும் பசுமைக்குடில் வாயு காரணமாகவே இவ்வாறு எதிர்ப்பு இயக்கம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சுவீடன் மக்கள் வாழ்வில் இது பெரும் தாக்கம் செலுத்தியுள்ள நிலையில் அவர்கள் பெருமளவில் விமானத்தில் பயணிப்பதை தவிர்த்து வருகிறார்கள்.
மேலும் இந்த ‘பறத்தல் அவமானம்’ அமைப்பானது சுவீடன் மக்களை மாற்று போக்குவரத்தை தேர்ந்தெடுக்குமாறு பிரசாரம் செய்து வருவதன் காரணமாக புகையிரதத்தில்; பயணிப்பது பெருமை மிகு செயலாக அங்கு மாறி வருவதுடன் விமானத்தில் பறப்பவர்களும் வெளியே சொல்ல வெட்கப்பட்டு, அதனை மறைப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
புகையிரதத்தில் பயணம் செய்யும் ஒரு நபர் ஒரு கிலோமீற்றருக்கு 14 கிராம் கரியமில வாயுவை உண்டாக்கும் அதேவேளை விமானத்தில் பறக்கும் நபர் ஒரு கிலோமீற்றருக்கு 285 கிராம் கரியமில் வாயுவெள உண்டாக்குகிறார் என ஐரோப்பிய சூழலியல் முகாமை சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது
#சுவீடனில் #விமானங்கள் #எதிரான இயக்கம் #பசுமைக்குடில் வாயு #பறப்பதுஅவமானம்