சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னை இன்று வியாழக்கிழமை வடகொரியாவில் சந்திக்கவுள்ளார். சீனாவில் இதுவரை இவர்கள் இருவரும் நான்கு முறை சந்தித்துள்ள போதிலும் 2005ஆம் ஆண்டிற்கு பின்னர் சீனத் தலைவர் ஒருவர் வட கொரியாவுக்கு பயணம் செய்வது இதுவே முதல்முறையாகும்.
இவர்களின் சந்திப்பில் நிறுத்தி வைக்கப்பட்ட வட கொரியாவின் அணு ஆயுத திட்டம் குறித்தும், பொருளாதார பிரச்சனைகள் குறித்தும் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஜப்பானில் நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சீன் ஜனாதிபதி ஷி ஜின்பிங்கை சந்தித்து பேசவுள்ள நிலையில் அதற்கு ஒரு வார காலம் முன்னதாக இந்த சந்திப்பு நடைபெறுகின்றது.
வட கொரியாவின் அணுஆயுதப் பயன்பாடு குறித்து வியட்நாமில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை எந்த ஒரு ஒப்பந்தமும் எட்டப்படாமல் முடிவடைந்த பின்னர் வடகொரிய தலைவரை சீன ஜனாதிபதி முதல்முறையாக சந்திக்கின்ற நிலையில் இருநாட்டு தலைவர்களும் அணுஆயுத பயன்பாடு தொடர்பாக தடைபட்ட பேச்சுவார்த்தை, மற்றும் வியட்னாம் சந்திப்பு தோல்வியில் முடிந்தமை குறித்து ஆலோசிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது
#சீனத்தலைவர் #ஜனாதிபதி #ஷி ஜின்பிங் #வடகொரியா #கிம் ஜாங் உன்