204
கல்முனை உப பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவது தொடர்பில் ஆராய்வதற்காக கல்முனைக்கு சென்றபாராளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்ன தேரர் முஸ்லிம் தமிழ் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு இன்று (20) வியாழக்கிழமை கல்முனை மாநகர சபையில் மேயரின் அலுவலகத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இதன் போது கல்முனை உப பிரதேச செயலகம் தொடர்பான இறுதி முடிவினை ஆராய்ந்து இவ்விரு சமூக பிரதிநிதிகளும் முன்வர வேண்டும் என சந்திப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
#கல்முனை #முஸ்லிம் #தமிழ் #அதுரலிய ரத்ன தேரர்
பாறுக் ஷிஹான்
Spread the love