153
வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளராகவிருந்த சி.சத்தியசீலனை தனது புதிய செயலாளராக ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் நியமித்துள்ளார். அதேவேளை இதுவரை காலமும் ஆளூநரின் செயலாளராகவிருந்த எல்.இளங்கோவன் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனமானது 2019 ஜுலை 01 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை எல்.இளங்கோவன் நான்கு வடமாகாண ஆளூநர்களுக்கு செயலாளராகவிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரின் திடீர் மாற்றத்திற்கான காரணத்தையும் அறிய முடியவில்லை.
#வடமாகாண #கல்வி அமைச்சின் #இளங்கோவன் #சுரேன் ராகவன்
Spread the love