உலகளவில் 2017ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த வருடத்தில் பெரும்பாலானோர் தமது இருப்பிடங்களிலிருந்து இடம்பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டின் இறுதிக்குள் 71 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் 2017ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், கடந்த ஆண்டு 68.5 மில்லியன் மக்கள், உள்நாட்டு யுத்தம் காரணமாக கட்டாயத்தின் பேரில் இடம்பெயர்ந்துளளனர் எனவும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் வெனிசூலாவிலிருந்து மாத்திரம் சுமார் 3 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
தமது சொந்த நாட்டிருலிருந்து வெளியேறும் ஒருவர், யுத்தம் மற்றும் அச்சம் காரணமாக தமது நாட்டிற்கு திரும்புவதில்லை என சர்வதேச மன்னிப்பு சபை குறிப்பிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது
#displace #UN #இடம்பெயர்ந்துள்ளவர்கள் #வெனிசூலா #ஐக்கிய நாடுகள் சபை