ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக உயர்நீதிமன்றில் இரண்டு அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்டு, ஆறுவருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசாரருக்கு பொதுமன்னிப்பு வழங்கியமைக்கு எதிராகவே இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து மற்றும் மாற்றுக்கொள்கைக்கான நிறுவனத்தினால் நேற்றையதினம் குறித்த இரு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மேலும் மனுக்களில் ஜனாதிபதியின் சார்ப்பாக, சட்டமா அதிபரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
#ஜனாதிபதிக்கெதிராக #அடிப்படை உரிமை மனுக்கள் #பாக்கியசோதி சரவணமுத்து #மாற்றுக்கொள்கைக்கான நிறுவனம்