இனத்துவ ரீதியிலும் நிலத் தொடர்பற்ற ரீதியிலும் உருவாக்க எத்தனிக்கும் கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தடைசெய்யக் கோரி கல்முனை முஸ்லிம் மக்கள் மேற்கொள்ளும் சத்தியாக்கிரக போராட்டம் தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக இன்று (21) வெள்ளிக்கிழமை கல்முனை ஐக்கிய சதுக்கத்தில் நடைபெறுகிறது.
குறித்த சாத்தியாக்கிரக போராட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சரும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் கலந்து கொண்டுள்ளார்
மேலும் கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம். றகீப், கல்முனை முகைதீன் ஜூம்ஆ பெரியபள்ளிவாசல் தலைவர் வைத்திய கலாநிதி எஸ்.எம்.ஏ. அஸீஸ் உள்ளிட்ட உலமாக்கள், அம்பாறை மாவட்டத்திலுள்ள அனைத்து முஸ்லிம் பிரதேசங்களையும் சேர்ந்த பொதுமக்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள், வர்த்தக சங்கங்கள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டு இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இதன்போது அரசின் பிரதிநிதியாக இங்கு வருகை தந்த ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் பி. தயாகமகே போராட்டக்காரர்களின் நிலைப்பாடு தொடர்பில் கேட்டறிந்தார்.
#முஸ்லிம் #சத்தியாக்கிரக போராட்டத்தில் #ஹரீஸ் #கல்முனை #தயாகமகே
பாறுக் ஷிஹான்