Home பிரதான செய்திகள் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இலங்கை 20 ஓட்டத்தினால் வெற்றி

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இலங்கை 20 ஓட்டத்தினால் வெற்றி

by admin
 

12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 27 ஆவது போட்டியில் இங்கிலாந்தினை இலங்கை அணி 20 ஓட்டத்தினால் வென்றுள்ளது. நேற்று மாலை லீட்ஸ் மைதானத்தில் ஆரம்பமான போட்டியில்  நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 232 ஓட்டங்களை எடுத்திருந்தது.

233 என்ற வெற்றியிலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 47 ஓவருக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 212 ஒட்டங்களை மாத்திரம் பெற்றதனையடுத்து இலங்கை அணி 20 ஓட்டத்தினால் வெற்றியீட்டியுள்ளது

இலங்கை அணி வீரர் லசித் மலிங்க 10 ஓவர்கள் பந்து வீசி 43 ஓட்டங்களை வழங்கி 4 விக்கெட்டுக்களையும், இசுறு உதான 8 ஓவர்கள் பந்து வீசி 41 ஓட்டங்களை கொடுத்து 2 விக்கெட்டுக்களையும், தனஞ்சய டிசில்வா 8 ஓவர்கள் பந்து வீசி 32 ஓட்டங்களை வழங்கி 3 விக்கெட்டுக்களையும், நுவான் பிரதீப் 10 ஓவர்கள் பந்து வீசி 38 ஓட்டங்களை வழங்கி ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றியிருந்தனர். போட்டியின் ஆட்டநாயகனாக 4 விக்கெட்டுக்களை கைப்பற்றிய மலிங்க தேர்வானார்.  #உலகக் கிண்ண #இங்கிலாந்து #இலங்கை   #வெற்றி #மலிங்க

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More