தடுப்பூசிகள் மீதான உலகின் பிற்போக்குத்தனமான செயற்பாடுகளினால் நோய் கிருமிகளின் மூலம் பரப்பப்படும் உயிரிழப்பை ஏற்படுத்தக் கூடிய நோய்களை தடுக்க வாய்ப்பிருந்தும் தடுக்க முடிவதில்லை என வல்லுநர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்
நோய்த்தடுப்பு ஊசிகள் குறித்த மக்களின் மனப்பான்மையை அறிவதற்காக உலகளவிலான நடத்தப்பட்ட ஆய்வில் பல பிராந்தியங்களில் மிகவும் குறைவான நம்பகத்தன்மையே பதிவு செய்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
உலகிலுள்ள 140க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 1,40,000க்கும் மேற்பட்ட மக்களிடம் இதுகுறித்த ஆராய்ச்சியை வெல்கம் டிரஸ்ட் எனும் அமைப்பு மேற்கொண்டதன் அடிப்படையிலே இவ்வாறு கவலை வெளியிடப்பட்டுள்ளது
உலகளவில் சுகாதாரத்துறைக்கு இருக்கும் முக்கியமான 10 அச்சுறுத்தல்களாக ஐநாவின் சுகாதார நிறுவனம் குறிப்பிட்டுள்ள பட்டியலில், தடுப்பூசியை போட்டுக்கொள்வதில் இருக்கும் தயக்கமும் இடம்பெற்றுள்ளது.
தடுப்பூசி போட்டுக்கொள்வது தொடர்பாக உலகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், அதன் மீது சிறிதளவு மக்களே நம்பிக்கையையே கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #தடுப்பூசிகள் #நோய்க்கிருமிகள்