கட்டாய விடுமுறை குறித்து காவல்துறை மா அதிபர் பூஜித ஜயசுந்தரவினால் தாக்கல் செய்யப்பட் மனுவை ஜூலை 31ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இந்த மனு குறித்த விசாரணை தொடர்பில் இன்றைய தினம் பூஜித ஜயசுந்தர உயர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்த நிலையிலேயே இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது
காவற்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தர, உயர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.
Jun 24, 2019 @ 04:48
காவற்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தர உயர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார். தனக்கு வழங்கப்பட்ட கட்டாய விடுமுறை, அடிப்படை உரிமையை மீறும் செயல் என அவரால் தாக்கல் செய்யப்பட்ட, வழக்கு விசாரணைக்காகவே அவர் இவ்வாறு உயர் நீதிமன்றத்திற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர், பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் காவற்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரை பதவிவிலகுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்திருந்த நிலையில் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ பதவிவிலகியிருந்த நிலையில் காவற்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டிருந்தார்.
தனக்கு வழங்கப்பட்ட கட்டாய விடுமுறை குறித்து அவரால் தாக்கல் செய்யப்பட் வழக்கு விசாரணைக்காக முன்னர் காவற்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தர உயர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்த நிலையில் குறித்த மனு மீதான விசாரணை இன்று வரை உயர்நீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது #காவற்துறை மா அதிபர் #பூஜித ஜெயசுந்தர #உயிர்த்த ஞாயிறு