பாடசாலை பாடப்புத்தகங்கள் அச்சிடுவதில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் குறித்து கிடைத்துள்ள முறைப்பாடு தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் அழைக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் மாதம் 08ம் திகதி அவரை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு நேற்று அழைப்பாணை வழங்கப்பட்டதாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
இதுதவிர எதிர்வரும் 01ம் திகதி 09.30 மணிக்கு ஆணைக்குழுவின் காவற்துறைப் பிரிவில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்குமாறு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசமுக்கு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ளது. #கல்விஅமைச்சர் #அகிலவிராஜ்காரியவசம் #ஜனாதிபதிவிசாரணைஆணைக்குழு