Home இலங்கைகொச்சினிலிருந்து, நியூசிலாந்துக்கு செல்ல முயன்ற இலங்கையர் உள்ளிட்ட 243 பேரை காணவில்லை…

கொச்சினிலிருந்து, நியூசிலாந்துக்கு செல்ல முயன்ற இலங்கையர் உள்ளிட்ட 243 பேரை காணவில்லை…

by admin


கேரள மாநிலத்தின் கொச்சின் துறைமுகத்திலிருந்து நியூசிலாந்துக்கு செல்ல முயன்ற 243 பேரை கடந்த ஆறு மாதங்களாக காணவில்லை என முறையிடப்பட்டுள்ளது. இவர்களில் 164 பேர் டெல்லியில் வசிக்கும் இலங்கை தமிழர்கள் என ஏஎன்ஐ செய்தி நிறுவனம் குறிப்பட்டுள்ளது.

இந்தாண்டு ஜனவரி மாதம் இவர்கள் புறப்பட்ட இவர்கள், நியூசிலாந்து சென்ற பின் தொடர்புகொள்வதாக தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது. எனினும் அவ்வாறு சொன்னவர்களை கடந்த ஆறு மாதங்களாக தொடர்புக் கொள்ள முடியவில்லை என இவர்களது உறவினர்கள் முறையிட்டுள்ளார்கள்.

இவர்களின் நிலை குறித்து அறிய இந்திய மத்திய அரசும், மாநில அரசும் உதவி செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து விசாரித்துவரும் கேரள காவற்துறையினர், இவர்களை நியூசிலாந்துக்கு அனுப்ப உதவிய 10 பேரை கைது செய்துள்ளதாகவும், மூன்று பேரை தேடி வருவதாகவும் கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. #கேரளா #கொச்சின்துறைமுகம் #நியூசிலாந்து #காணவில்லை #இலங்கைத்தமிழர்கள்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More