பிரேஸிலில் நடைபெற்றுவரும் 46-வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் உருகுவே அணி சிலியை வென்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. நேற்றையதினம் நடைபெற்ற ‘சி’ பிரிவு லீக் போட்டி ஒன்றில் 15 முறை சம்பியன் பட்டத்தினை வென்ற உருகுவே அணி, நடப்பு சம்பியனான சிலியை எதிர்கொண்டது.
முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் போடப்படாத நிலையில் 82-வது நிமிடத்தில் உருகுவே அணி கோல் ஒன்றினைப் போட்டதன் மூலம் 1-0 என்ற கோல் கணக்கில் வென்றுள்ளது.உருகுவே அணி 2 வெற்றி மற்றும் ஒரு சமனிலை ஆகியவற்றைப் பெற்று 7 புள்ளிகளுமன் தனது பிரிவில் முதலிடத்தைப் பெற்றதுடன் சிலி அணி 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகளும் பெற்று 2-வது இடத்தையும் பிடித்து கால்இறுதிக்கு முன்னேறியுள்ளன.
லீக் சுற்று முடிவில் பிரேசில், வெனிசுலா, பெரு , கொலம்பியா, அர்ஜென்டினா, பராகுவே , உருகுவே, சிலி ஆகிய அணிகள் காலிறுதிக்குள் நுழைந்துள்ளன. அதேவேளை பொலிவியா, கட்டார், ஜப்பான், ஈகுவடார் ஆகிய அணிகள் வெளியேறியுள்ளன.
#கோபா #உருகுவே #காலிறுதி #copa