உச்சநீதிமன்ற உத்தரவின்படி ஜூன், ஜூலை ஆகிய இரண்டு மாதங்களுக்கான 40.24 டிஎம்சி நீரை காவிரியில் கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும் என காவிரி நீர் மேலாண்மை ஆணையகம் நேற்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது. நேற்று நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழகம், கர்நாடகம், கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது காவிரியில் நீர் திறந்து விடுவது தொடர்பாக காவிரிப் படுகைப் பகுதிகளில் உள்ள நீரியல் சூழல் குறித்து விவாதிக்கப்பட்டது. அத்துடன் உச்சநீதிமன்ற உத்தரவின்படி, மாதம்தோறும் பிலிகுண்டுலுவில் விடப்பட வேண்டிய ஜூன் மாதத்துக்கான 9.19 டிஎம்சி நீரையும், ஜூலைக்கான 31.24 டிஎம்சி நீரையும் விடுவிப்பதை கர்நாடகம் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது #ஜூன் #ஜூலை #காவிரி #திறந்துவிட #உத்தரவு