“Jhona” says she and her friend were sexually exploited as children, by the girl’s mother
குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தி அதனை காணொளியாக எடுத்து இணையத்தில் பதிவேற்றி விற்கும் சம்பவங்கள் பிலிப்பைன்ஸில் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவங்களால் அந்நாட்டில் மூன்றில் இரண்டு குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.;
இது பெரும் வியாபாரமாக அந்நாட்டில் நடந்துள்ளது எனவும் இந்த காணொளிகள் மேற்கத்திய நாடுகளை சேர்ந்தவர்களுக்கு விற்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது ஆறு மாத குழந்தைகூட இதனால் பாதிக்கப்பட்டிருப்பதாக சர்வதேச நீதி திட்டம் என்னும் அமைப்பு தெரிவித்துள்ளது
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு லட்சம் என்ற அளவில் இருந்த குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தி இணையத்தில் வெளியிடும் சம்பவங்கள் கடந்தாண்டு இது 18 மில்லியனாக உயர்ந்துள்ளது என காணாமல் மற்றும் தவறாக பயன்படுத்தப்படும் குழந்தைகளுக்கான மையம் சுட்டிக்காட்டியுள்ளது.
அதேவேளை 500 குழந்தைகளை மீட்டுள்ள சர்வதேச நீதி மையம் என்ற அமைப்பு 69 சதவீத குழந்தைகள் பெற்றோர் அல்லது உறவினர்களாலேயே துன்புறுத்தப்பட்டுள்ளார்கள் எனத் தெரிவித்துள்ளதுடன் 50 சதவீத குழந்தைகளுக்கு 12 வயது அல்லது அதற்கு குறைவாகதான் இருக்கும் எனத் தெரிவித்துள்ளது
இதனை சமாளிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக பிலிப்பைன்ஸ் அரசு தெரிவித்துள்ள அதேவேளை பிழைப்பதற்கு பணம் வேண்டும் என்பதற்காகத்தான் இவ்வாறு செய்கிறோம் என அம்மக்கள் தெரிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. #sexually #exploited #children #பாலியல் #பிலிப்பைன்ஸ்