பிரதேச அபிவிருத்தியில் அரசியல் நடாத்தப்படுவதாக வாக்குவாதத்தில் ஈடுபட்ட முஸ்லீம் காங்கிரஸ் உறுப்பினர்கள் இனிவரும் காலங்களில் முன்மொழிவு விடயங்களில் சரியான நடவடிக்கை எடுக்கபடாது விட்டால் எந்தவித ஆதரவும் எதிர்காலத்தில் கிடையாது என தெரிவித்தனர்.
நிந்தவூர் பிரதேச சபையின் 15 ஆவது சபை அமர்வு வியாழக்கிழமை (27) காலை 10.20 மணியளவில் பிரதிதவிசாளர் வை.எல் சுலைமாலெப்பை தலைமையில் நடைபெற்றது.
பிரதேச சபையின் சபா மண்டபத்தில் மத அனுட்டானங்களுடன் ஆரம்பமான பின்னர் 2019 மே மாதத்திற்கான கூட்டறிக்கை சபை அங்கீகாரத்திற்காக விடப்பட்டது.இதன் போது முஸ்லீம் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் முகம்மட் தம்பி சப்றாஸ் ஆமோதிக்க மேற்படி கூட்டறிக்கையை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் எம்.எம் சம்சுதீன் வழிமொழிந்தார்.தொடர்ந்து 2019 மே மாதத்திற்கான கணக்கறிக்கை அங்கீகாரத்திற்கு விடப்பட்டது.இதற்கமைய சபையில் இருந்த உறுப்பினர்கள் ஆமோதித்தும் வழிமொழிந்தும் கணக்கறிக்கையை அங்கீகரித்தனர்.
அடுத்து உறுப்பினர்களின் வழமையான முன்மொழவுகள் சில சபையில் எடுக்கபட்டு இறுதியாக சபைக்கு புதிதாக வந்திருந்த உறுப்பினரின் உரையுடன் சபை சிறிது நேரத்தின் பின்னர் நிறைவடைந்தது.
சபைக்கு புதிய உறுப்பினராக நிர்தவூர் 3ஆம் வட்டாரத்தை சேர்ந்த ஆதம்பாவா ரிபானா என்பவர் வருகை தந்திருந்தார்.இவர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் 2 ஆம் வட்டார உறுப்பினரான திருமதி நூர் முஹம்மது வசீரா என்பவர் இராஜனாமாச் செய்ததை அடுத்து எழுந்த வெற்றிடத்திற்கு தெரவானமை குறிப்பிடத்தக்கது.
. #பிரதேச அபிவிருத்தி #அரசியல் #நிந்தவூர் #குற்றச்சாட்டு