சேலம் – சென்னை எட்டு வழிச் சாலைக்காகக் கையகப்படுத்தப்பட்ட நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து விவசாயிகள் நேற்றையதினம் சேலம் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர் . சேலம் – சென்னை இடையே சுமார் 10,000 கோடி செலவில் எட்டு வழிச் சாலை அமைக்கவுள்ளதாக மத்திய மாநில அரசுகள் அறிவித்துள்ள நிலையில் இந்த திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங்கள் மேற்கொண்டிருந்தனர்
அத்துடன் இந்தத் திட்டத்துக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில், விவசாயிகளின் நிலத்தைக் கையகப்படுத்துவதற்கு நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையில் இந்தத் தடையை நீக்கக் கோரி தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையகம் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்து வழக்கு இடம்பெற்று வருகின்றது.
இந்த நிலையில் எட்டு வழிச் சாலைக்காகக் கையகப்படுத்திய நிலத்தைத் திரும்ப ஒப்படைக்கக் கோரி நேற்று சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் முற்றுகை போராட்டம் நடத்தினர். 150க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒன்றிணைந்து கோரிக்கை மனுவுடன் ஊர்வலமாகச் சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதுடன் ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன. #எட்டு வழிச் சாலை #கையகப்படுத்தப்பட்ட #விவசாயிகள் #முற்றுகைப் போராட்டம் ,